இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கிலானி இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் திகார் சிறை கைதி ‘ஹூரியத்’ தலைவராக அறிவிப்பு: பாகிஸ்தானின் அடாவடி நியமனத்தால் காஷ்மீரில் பதற்றம்

9/9/2025 5:25:55 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

புதுடெல்லி: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி இறந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், ஹூரியத் அமைப்பின் புதிய தலைவராக, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  மஸ்ரத் ஆலம் பட் என்பவரை, அந்த அமைப்பின் தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான சையத் அலி ஷா கிலானி (91) கடந்த சில நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்தார். அவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கிலானிக்கு நெருக்கமானவராக கருதப்படும் பாகிஸ்தான் ஆதரவாளர் மஸ்ரத் ஆலம் பட் (50) என்பவரை, ஹூரியத் அமைப்பின் புதிய தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியா தரப்பில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

காரணம், தீவிரவாத செயலுக்காக நிதி பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஸ்ரத் ஆலம் பட் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் பொது பாதுகாப்பு சட்டப் பிரிவின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை ஹுரியத் தலைவராக பாகிஸ்தான் ஏன் தேர்ந்தெடுத்தது? என்ற கேள்வியும் எழுகிறது.  கிலானி ஹூரியத் அமைப்பில் இருந்து பதவி விலகிய பின்னர், மற்றொரு பாகிஸ்தான் ஆதரவாளரான அஷ்ரப் சஹ்ராய் என்பவரை அந்த அமைப்பின் தலைவராக நியமிக்க  வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பியது. ஆனால் அவர் கடந்த மே மாதம் இறந்தார். தற்போது கிலானியும் இறந்ததால், மஸ்ரத் ஆலம் பட்டை புதிய தலைவராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முஸ்லிம் லீக் தலைவரான இவர், 2010 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்;  பின்னர் 2015 மார்ச்சில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் ஏப்ரல் 17, 2015  அன்று கைது செய்யப்பட்டு நகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.  தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹுரியத்  அமைப்பு முடங்கி கிடக்கும் நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் மஸ்ரத்  ஆலம் பட் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு மே முதல் செப்டம்பர் மாத வரை நடந்த பாதுகாப்பு படையினருக்கு எதிரான கல் வீச்சு சம்பவங்களில் 110 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் 537 பேர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் கிலானி மற்றும் அவரது கூட்டாளிகள் இருந்தனர். இவர்கள் பாகிஸ்தானையும், லஷ்கர் - இ - தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை வெளிப்படையாக ஆதரித்தனர். கடந்த 2015 ஏப். 15ம் தேதி நடந்த ஊர்வலத்தின் போது, ‘தேரா மேரா க்யா அர்மன், காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்’ மற்றும் ‘ஹபீஸ் சயீத் கி க்யா பாகாம், காஷ்மீர் பனேகா பாகிஸ்தான், ஜீவ் ஜீவ் பாகிஸ்தான்’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் சிறப்புக் குழுவின் தலைவர் ஷாஹ்ரியார் அஃப்ரிடி, ஹூரியத் அமைப்பின் தலைவராக மஸ்ரத் ஆலம் பட்டை நியமித்ததை வரவேற்றுள்ளது. ஹுரியத் அமைப்பு மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்த நிலையில், இந்த பிரிவினைவாத அமைப்பு பாகிஸ்தானை தளமாக கொண்டு மீண்டும் செயல்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்ட மஸ்ரத் ஆலம் பட்டுக்கு, காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால், அடுத்த சில நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு மற்றும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



  • முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்



  • சிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]