இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாடு முழுவதும் 68 பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை: 4 தமிழக வக்கீல்களுக்கு ஐகோர்ட் நீதிபதி பதவி: பழங்குடியின நீதிபதி உட்பட 10 பேர் பெண்கள்; 44 பேர் வக்கீல்கள்

9/4/2025 5:44:45 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நான்கு வழக்கறிஞர்கள் உட்பட 68 பேர் 12 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை பட்டியலை கொலீஜியம் குழு ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. இதில், பழங்குடியின பெண் நீதிபதி உட்பட 10 ெபண்கள் மற்றும் 44 பேர் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலீஜியம்’ குழுவின் கூட்டம் கடந்த ஆக. 25 மற்றும் செப். 1ம் தேதி நடைபெற்றது. அப்போது பல மாநில உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 112 பேரின் ெபயர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலுக்கு பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் 82 பேர் பார் அசோசியேசன் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்.

இறுதியாக, சென்னை, அலகாபாத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களில் 68 நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மேற்கண்ட பட்டியலின்படி 24 பேர் தற்போது நீதிபதிகளாக பணியில் உள்ளனர். மேலும் 44 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் சுந்தரம்  மதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பல மாநிலங்களிலும் பணியாற்றிய வழக்கறிஞர்களும் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின பெண் நீதிபதி மார்லி வாங்குங்கை, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பார். கொலீஜியம் பரிந்துரைத்துள்ள 68 நீதிபதிகளில் 10 பேர் பெண்கள் ஆவர்.

மேற்கண்ட கொலீஜியம் குழுவின் பரிந்துரை பட்டியல், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை வழங்குவார். அதனை தொடர்ந்து புதியதாக நியமிக்கப்பட்ட 68 பேரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பல்வேறு மாநிலங்களில் பதவியேற்பர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே நேரத்தில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அடுத்த சில நாட்களில் மாநில உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் புதியதாக நியமிப்பதற்காக பரிந்துரை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



  • முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்



  • சிறை கைதிகளை காணொலி மூலம் ஆஜர்படுத்தலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]