இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்

7/24/2021 4:59:46 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: உருமாறிய வைரசால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும், அது டிசம்பருக்குள் வந்துவிடும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிட்டதிட்ட 42 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த கவலைகளும் தொடர்கின்றன. இந்நிலையில்  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  ‘சார்ஸ்-கோவ்-2ன் உருமாறிய வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதால், எதிர்காலத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

அதனால், பூஸ்டர் தடுப்பூசி டோஸ் போட வேண்டிய அவசியம் ஏற்படலாம். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதால், வெவ்வேறு வகையான உருமாறிய வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தமட்டில், அவை இரண்டாவது தலைமுறை தடுப்பூசியாக இருக்கும். அது, உருமாறிய வைரசில் இருந்து நம்மை பாதுகாப்பது மற்றுமின்றி ஒட்டுமொத்த செயல்திறனையும் அதிகரிக்கும். பூஸ்டர் தடுப்பூசி போடுதல் குறித்து பல நாடுகள் ஆய்வுகளை செய்து வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால், இந்தியாவை பொறுத்தமட்டில் அனைத்து  மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் நடந்து வரும் நிலையில், அதன் முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவகையில் மூன்று நிலைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, ​​2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சோதனைகள் நடந்து வருகின்றன. அதேபோல், அகமதாபாத்தில் உள்ள மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா, குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அவர்கள் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

வரும் சில வாரங்களில் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டது போல், பல கட்டங்களாக தடுப்பூசி போடப்படும். டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வசதியாக அமெரிக்காவின் மாடர்னா மற்றும் ஃபைசருடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும், இறுதி செய்யப்படவில்லை’ என்றார்.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]