இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’: பிரதமர் மோடி பேச்சு

6/13/2021 5:50:41 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் நடைபெறுகிறது. இந்மாநாட்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகள் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியாக பேசுகையில், ‘கொரோனா தொற்றை ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து இந்தியா எதிர்கொண்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியது.

உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். எதிர்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை அவசியம் தேவை. கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். இதுதான், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியாவின் செய்தியாகும். கொரோனா மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்தல் மற்றும் பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்க உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]