இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு?: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்

6/13/2021 5:48:53 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

லக்னோ: உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலம் உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநில அரசியலில் கடந்த நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், பாஜக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அவர் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து சமாதனப்படுத்தியதாக கூறப்பட்டது. அதேநேரம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களையும் யோகி சந்தித்ததால், தற்போது மற்றொரு செய்தி உத்தரபிரதேசத்தில் வலம் வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வஞ்சல் என்ற மாநிலத்தை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும், புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான சட்ட செயல்முறைகள் தொடங்கிவிட்டதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பாஜக மூத்த தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில், ​​மத்திய பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கர்  என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் பிறந்தது. பீகாரில் இருந்து ஜார்கண்ட் என்ற மாநிலம் உருவானது. இவ்வாறாக, தற்போது உத்தரபிரதேசத்திலிருந்து பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகின்றன. இவ்வாறு புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமானால், மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் 3வது பிரிவை பயன்படுத்தி எல்லைகளை மாற்றியமைக்க முடியும். எந்தவொரு மாநிலத்தின் பரப்பையும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். எல்லை வரம்புகளை மாற்றியமைக்க முடியும். மாநிலத்தின் பெயரையும் மாற்ற முடியும். ஒருவேளை பூர்வஞ்சல் மாநிலம் அமைந்தால்,  இப்பகுதியின் எம்எல்ஏக்கள்  புதிய மாநிலத்தின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். புதிய மாநிலத்தில் தற்காலிக  சட்டமன்றம் உருவாக்கப்படும். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இங்கு பெரும்பான்மையைக் கொண்ட கட்சி ஆட்சி  அமைக்க அழைக்கப்படும். இன்றைய நிலையில் பேசபட்டு வரும் மாநில பிரிப்பு  திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், உத்தரபிரதேச மாநில பேரவை தேர்தலுடன்  பூர்வஞ்சல் தேர்தலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம்,  உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் காலம் இன்றும் 8 மாதங்களே  உள்ளன. அதனால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதியதாக பூர்வஞ்சல் மாநிலத்தை உருவாக்க முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய மாநிலத்தின் சட்டசபை,  மக்களவைத் தொகுதிகளின் எல்லை வரம்பு, இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ்  வருகிறது. அதனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொகுதிகளுக்கான  இடங்களை ஆணையம்தான் தீர்மானிக்க முடியும். பூர்வஞ்சல் மாநிலம் அமைந்தால்,  எத்தனை சட்டசபை மற்றும் மக்களவை இடங்கள் இருக்கும்?  என்ற கேள்வி  எழுந்துள்ளது. புதிய திட்டத்தின்படி 125 சட்டசபை மற்றும் 25 மக்களவை  தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. பூர்வஞ்சல் பகுதியில் உள்ள சட்டசபை  தொகுதிகளில், 115 இடங்களுடன் பாஜக பெரும்பான்மையில்  உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பூர்வஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்.  அதனால், அவர் புதிய மாநிலத்தில் முதல்வராக முடியும். அதேநேரம் உத்தரபிரதேசத்தின் முதல்வர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால், உத்தரபிரதேச பேரவை தேர்தலுக்கு முன், மாநிலத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

'மாயாவதியின் தீர்மானம்'
புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டுமானால், குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அது, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதலுக்கு பின்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில், அப்போதைய முதல்வரும், பகுஜன்  சமாஜ்வாதி தலைவருமான மாயாவதி ஆட்சியில் உத்தரபிரதேசத்தை பூர்வஞ்சல்,  புண்டேல்கண்ட், பாசிம் பிரதேசம் மற்றும் அவதாபிரதேசம் என பிரிக்கம்  தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால்  4 மாநிலமாக பிரிப்பதற்கான ஆலோசனையை மத்திய அரசு ஏற்கவில்லை அல்லது  அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த 4 மாதங்கள் கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு சம்பவம்: கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.! பயங்கர சம்பவம் குறித்து தலைமை நீதிபதி கவலை



  • ஆக்கிரமிப்பை அகற்றிய போது ஏற்பட்ட வன்முறை; அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி: பாஜக முதல்வரின் தம்பியான மாவட்ட எஸ்பி மீது புகார்



  • ‘குவாட்’ மாநாடு, ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: நாளை துணை அதிபர் கமலா ஹாரிஸூடன் சந்திப்பு



  • பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்பு



  • மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற முடியாது: எடியூரப்பா பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி



  • மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு



  • அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு



  • தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்டமாக 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]