மோசடி புகார் எதிரொலி கன்னியாகுமரி முன்னாள் மாவட்ட செயலாளர் கட்சி பதவி பறிப்பு : ஜெயலலிதா நடவடிக்கை
11/27/2014 4:27:11 PM
சென்னை: மோசடி புகாரை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ஜான் தங்கம் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.தூண்டில் வளைவு பணி மற்றும் மருத்துவக்கல்லூரி சீட் வாங்கி தருவதாக சுமார் ரூ.1.29 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், குமரி மாவட்ட முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், குமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளருமான டி.ஜான் தங்கம் மீது எஸ்.பி.யிடம் கான்ட்ராக்டர் ஜெயசந்திரன் என்பவர் கடந்த 24ம் தேதி புகார் அளித்தார். இந்நிலையில், மோசடி புகாரை அடுத்து ஜான் தங்கத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான்தங்கம் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்' என்றார்.