இன்று உலக மீனவர் தினம்
11/21/2014 4:12:58 PM
நாகர்கோவில்: உலக மீனவர் தினம் இன்று (21ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி கடற்கரை கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவ கிராமங்களில் காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடலோர கிராமங்களில் மீனவர்கள் வாழ்வும், வளமும் என்ற தலைப்பில் பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு, ஓவியம் மற்றும் நடன போட்டிகள் வரும் 23ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரை கிராமங்களில் நடந்த சிறப்பு திருப்பி நிகழ்ச்சியில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.