இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜனவரியில் அணை கட்டுவது உறுதி டெண்டர் விடும் பணி துவக்கம்: கர்நாடக அமைச்சர் பேட்டி

11/21/2014 4:12:34 PM
முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை காலை கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் மேகதாது அருகே அணைகள் கட்டும் பணி ஜனவரியில் தொடங்க உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடுவது  ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறினார்.கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் இன்று அரசு  முறை பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நீர்பிடிப்பு பகுதியான மேகதாது அருகே இரு அணைகள் கட்ட கர்நாடக அரசு  முடிவுசெய்துள்ளது.

 காவிரியில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீரை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், இப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பெங்களூர் உள்பட  பல்வேறு இடங்களில் குடிதண்ணீருக்காக வினியோகிக்கவும், கர்நாடகாவில் அதிக அளவில் மின்தட்டுப்பாடு இருப்பதால் அதை சமாளிக்கவும் மேகதாது அருகே இரு  அணைகளை கட்ட அரசு முடிவுசெய்தது. இதற்காக, இட ஆய்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய நதிநீர் பங்கீடு  ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அணைகள் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

மத்திய நதிநீர் பங்கீடு ஆணையத்தின் அனுமதி மற்றும் அணைகள் கட்டும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம்  தேர்வு செய்வது போன்றவை வரும் டிசம்பர் 31க்குள்  முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட பணிகள் அனைத்து முடிந்த பின்னர், 2015-ஜனவரியில் அணைகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.  ஆனால், கர்நாடகாவின் தேவையை, தமிழக அரசு புரிந்துகொள்ளாமல், மேகதாது அருகே அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடக அரசின்  முயற்சியை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தேவையற்றது. தமிழக அரசின் இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை : மீரா ஜாஸ்மின் திருமணம் பதிவு செய்ய மாநகராட்சி மறுப்பு



  • சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பெண் அமைச்சர் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு



  • முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி



  • மார்கழி மாத பிறப்பு : திருப்பதியில் டிச.16 முதல் சுப்ரபாத சேவை ரத்து



  • சென்னை, மும்பையில் மாதிரி திருப்பதி கோயில்: தேவஸ்தானம் முடிவு



  • நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் சிறப்புரை : இந்திய வெளியுறவு துறை தகவல்



  • கருப்பு பணம் மீட்பு விவகாரம் : முறைகேடு குறித்து ஆதாரங்கள் அளித்தால் ஒத்துழைக்க தயார்: சுவிஸ் தூதர் பேட்டி



  • டெல்லி வீட்டில் வழுக்கி விழுந்தார் : முன்னாள் அமைச்சர் சரத்பவார் படுகாயம் : விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டார்



  • சிபிஐ புதிய இயக்குனராக அனில் சின்கா நியமனம்



  • ராணுவத்தில் ஆள்பற்றாக்குறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தகவல்



Facebook

Twitter

Take off Lakshmi menon Vishal

லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription