இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இலங்கை சிறையில் உள்ள 24 மீனவர்களின் காவல் டிசம்பர் 5 வரை நீட்டிப்பு

11/21/2014 3:24:21 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

திருச்சி: புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த  செப்டம்பர் 27, 30, அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 பேரின் காவலும்  இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 24 மீனவர்களும்  இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வரும் டிசம்பர்  5ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் 24பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5வது முறையாக  மீனவர்களின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே கவலை அளித்துள்ளது.

தமிழக மீனவர்களின் 79 விசைப்படகுகள், 3 நாட்டுப்படகுகள் என மொத்தம் 82 படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மழை, காற்றால் 15க்கும்  மேற்பட்ட படகுகள் சேதமடைந்துவிட்டது. சில நீரில் மூழ்கிவிட்டன. இதனால் படகை நம்பி பிழைப்பு நடத்தி வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரமின்றி  தவித்து வருகின்றனர். மாற்று தொழிலுக்கும் வழியில்லாததால் மீனவ குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன.  82 படகுகளையும் உடனடியாக மீட்டு தர மத்திய  அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். சிறையில் உள்ள 24 மீனவர்களையும் விடுதலைசெய்ய வேண்டும்  என தமிழக மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • கொடைக்கானல் கீழ்மலையில் காய்த்து குலுங்குது ஆரஞ்சு: விலையில்லாததால் விவசாயிகள் கவலை



  • நாளை திருவண்ணாமலை மகா தீபம்: கோயம்பேட்டில் இருந்து 700 சிறப்பு பஸ்கள்



  • திமுக எம்எல்ஏ வெளியேற்றம் : ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்



  • கோவை அருகே கோழிகளை தொடர்ந்து ஆடுகளும் சாவதால் பீதி



  • சட்டசபையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகள் ஏராளம் கருணாநிதி அறிக்கை



  • வீட்டுமனை கண்காட்சி டிச.6, 7 தேதிகளில் நடக்கிறது



  • பிரசவத்தில் இளம்பெண் சாவு: மறியல் ராயபுரத்தில் பரபரப்பு



  • காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் மற்றொரு தரப்பு தொடர் போராட்டம்



  • ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் : சீமான் அறிவிப்பு



  • தமிழகத்தில் லோக் அயுக்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription