இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழக அரசின் செயல்பாடு கவலை அளிக்கிறது: தமிழிசை குற்றச்சாட்டு

11/21/2014 3:23:52 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சென்னை: பாஜ மீனவரணி சார்பில் ‘நமோ மீன் உணவு திருவிழா‘ மெரினா கடற்கரை அருகே இன்று காலை நடந்தது. விழாவுக்கு மாநில பாஜ மீனவரணி தலைவர்  சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செம்மலர் சேகர் முன்னிலை வகித்தார். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தமிழக பாஜ தலைவர் தமிழிசை  சவுந்தரராஜன் கலந்து கொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 100 கிலோ அளவிலான இலவச மீன்களை வழங்கினார். பின்னர், தமிழிசை நிருபர்களுக்கு அளித்த  பேட்டி:இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள், பிரதமர் நரேந்திரமோடி முயற்சியால் மீட்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். இது மீனவர்களுக்கு,  உலக மீனவர்கள் தின வாழ்த்தாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவ பிரதிநிதிகள்  டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஊக்கமளிக்க வேண்டும், ஆழ்கடல்  துறைமுகங்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எவ்வளவு செலவானாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக வெளியுறவு துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்  மற்றும் அவர்களின் படகுகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. எங்கு பார்த்தாலும்,  மோசமான சாலைகளாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கோடம்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு வரவே சுமார் 2 மணி நேரம் ஆகிறது. அரசு  போக்குவரத்துக் கழகங்களில் 200 பஸ்கள் முடங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கச்சத் தீவை மீட்க தமிழக பாஜ  தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். இது எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் தமிழக பாஜ துணைத் தலைவர்கள்  வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர்கள் ஜெயசங்கர், காளிதாஸ், லலித் ஜெயின், மாநில மீனவரணி பொருளாளர் கொட்டிவாக்கம் மோகன் மற்றும்  மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • கொடைக்கானல் கீழ்மலையில் காய்த்து குலுங்குது ஆரஞ்சு: விலையில்லாததால் விவசாயிகள் கவலை



  • நாளை திருவண்ணாமலை மகா தீபம்: கோயம்பேட்டில் இருந்து 700 சிறப்பு பஸ்கள்



  • திமுக எம்எல்ஏ வெளியேற்றம் : ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்



  • கோவை அருகே கோழிகளை தொடர்ந்து ஆடுகளும் சாவதால் பீதி



  • சட்டசபையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகள் ஏராளம் கருணாநிதி அறிக்கை



  • வீட்டுமனை கண்காட்சி டிச.6, 7 தேதிகளில் நடக்கிறது



  • பிரசவத்தில் இளம்பெண் சாவு: மறியல் ராயபுரத்தில் பரபரப்பு



  • காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் மற்றொரு தரப்பு தொடர் போராட்டம்



  • ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் : சீமான் அறிவிப்பு



  • தமிழகத்தில் லோக் அயுக்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription