இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குழந்தைகள் மரணம் தடுக்க சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி: ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

11/21/2014 3:22:49 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பதை தடுக்க, சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:தருமபுரி அரசு  மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் குறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் அளித்துள்ள பேட்டியில், நடைபெற்ற  மரணங்கள் அனைத்தும் இயற்கையானது என்றும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் குழந்தைகள் இதுபோன்று இறப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் மரணம் குறித்து மேற்கண்ட டாக்டர்கள் தெரிவித்துள்ள கருத்து மிகவும் நியாயமற்றது. மரணம் இயற்கையா? செயற்கையா? என்பதல்ல பிரச்சனை.  மாறாக, இந்த மரணங்களை தடுத்திருக்க முடியுமா? இல்லையா என்பதுதான் அடிப்படையான பிரச்சனை. தடுக்க முடியாமல் போனதற்கு சிகிச்சை தேவைப்படும்  குழந்தைகள் பயணிக்க வேண்டிய தூரம், நேரம் மற்றும் வசதி, மருத்துவமனை வசதிகள், சிகிச்சைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், உபகரணங்கள்  சீர்செய்ய முடியாத உடல்நலக் கோளாறு என்று பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

இந்த மரணங்கள், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சைகள் ஆகியவற்றிற்கு போதுமான  நிதிஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையையே வெளிப்படுத்துகிறது. அரசு இவற்றிற்கு கூடுதல் நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கொடைக்கானல் கீழ்மலையில் காய்த்து குலுங்குது ஆரஞ்சு: விலையில்லாததால் விவசாயிகள் கவலை



  • நாளை திருவண்ணாமலை மகா தீபம்: கோயம்பேட்டில் இருந்து 700 சிறப்பு பஸ்கள்



  • திமுக எம்எல்ஏ வெளியேற்றம் : ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்



  • கோவை அருகே கோழிகளை தொடர்ந்து ஆடுகளும் சாவதால் பீதி



  • சட்டசபையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகள் ஏராளம் கருணாநிதி அறிக்கை



  • வீட்டுமனை கண்காட்சி டிச.6, 7 தேதிகளில் நடக்கிறது



  • பிரசவத்தில் இளம்பெண் சாவு: மறியல் ராயபுரத்தில் பரபரப்பு



  • காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் மற்றொரு தரப்பு தொடர் போராட்டம்



  • ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் : சீமான் அறிவிப்பு



  • தமிழகத்தில் லோக் அயுக்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription