கணினி பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்
11/21/2014 2:19:40 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், மகளிர் குழு பெண்களுக்கு இலவச கணினி பயிற்சி கடந்த 3 மாதம் நடந்தது. இதில் 100 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. இதற்கு செயலர் அலுவலர் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஷேக் தாவூத், கூட்டுறவு சங்க தலைவர் சிவகுமார், இளநிலை உதவியாளர் நரேந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ராசமாணிக்கம் கலந்துகொண்டு 84 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். அலுவலக ஊழியர்கள் முருகவேல், வெங்கடேசன், முனி சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.