இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தாஜ்மகால் யாருக்கு சொந்தம்? உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு

11/21/2014 2:10:18 PM
முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை நாளை காலை கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

ராம்பூர்: உத்தரபிரதேசத்தின் அமைச்சரும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான அசம்கான், ‘தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு முஸ்லிம்களின் சமாதி இடம் பெற்றுள்ள தாஜ்மகாலை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த விரும்புகிறார்கள். எங்கெல்லாம் முஸ்லிம்களின் சமாதியும், நினைவிடங்களும் உள்ளனவோ அவை அனைத்தும் மத்திய வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மோசமான இடங்களாக இருந்தால் அது வக்பு வாரியத்திடம் இருக்கும். மிகவும் விலை மதிப்பு உடையது எல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமாகுமா?தாஜ்மகாலில் இருந்து வரும் வருமானத்தை முஸ்லிம் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த வேண்டும். அதனைக் கொண்டு இரண்டு பல்கலை கழகங்களை வக்பு வாரியத்தால் நடத்தி விட முடியும் என்றார்.

அசம்கானின் கருத்துக்கு லக்னோ இமாம் கலீத் ரஷீத்தும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அசம்கான் கூறியது போல தாஜ்மகால் முஸ்லிம்களின் உணர்வுகளுடன் கலந்த ஒன்றாகும். அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் ஷநவாஸ் ஹுசைன் கூறுகையில், தாஜ்மகால் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவிடமாகும். அது இந்திய தொல்லியல் துறையின் வசம் உள்ளது என்பது அசம்கானுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அசம்கான் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தாஜ்மகால் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்தார்.அதே போல் டெல்லி வக்பு வாரிய தலைவர் சவுத்ரி மதீன் அகமது கூறுகையில், இந்திய தொல்லியல் துறையால் தாஜ்மகால் சிறப்பாகவே பரமாரிக்கப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற கோரிக்கைகளை எழுப்புவது சரியானதல்ல என்றார்.

மேலும் சில
  • ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை : மீரா ஜாஸ்மின் திருமணம் பதிவு செய்ய மாநகராட்சி மறுப்பு



  • சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பெண் அமைச்சர் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு



  • முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி



  • மார்கழி மாத பிறப்பு : திருப்பதியில் டிச.16 முதல் சுப்ரபாத சேவை ரத்து



  • சென்னை, மும்பையில் மாதிரி திருப்பதி கோயில்: தேவஸ்தானம் முடிவு



  • நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் சிறப்புரை : இந்திய வெளியுறவு துறை தகவல்



  • கருப்பு பணம் மீட்பு விவகாரம் : முறைகேடு குறித்து ஆதாரங்கள் அளித்தால் ஒத்துழைக்க தயார்: சுவிஸ் தூதர் பேட்டி



  • டெல்லி வீட்டில் வழுக்கி விழுந்தார் : முன்னாள் அமைச்சர் சரத்பவார் படுகாயம் : விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டார்



  • சிபிஐ புதிய இயக்குனராக அனில் சின்கா நியமனம்



  • ராணுவத்தில் ஆள்பற்றாக்குறை அமைச்சர் மனோகர் பரிக்கர் தகவல்



Facebook

Twitter

Take off Lakshmi menon Vishal

லட்சுமி மேனனை கழற்றிவிடும் விஷால்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription