இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கர்நாடகா அணை கட்டுவதை கண்டித்து டெல்டாவில் நாளை பந்த் 500 இடங்களில் மறியல்: தனியார் பஸ், லாரிகள் ஓடாது

11/21/2014 2:02:35 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

தஞ்சை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 500 இடங்களில் சாலைமறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.  மேட்டூருக்கு தண்ணீர் வரும் வழியில் மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு 2 அணைகளை கட்டி 48 டிஎம்சி தண்ணீரை தேக்க முடிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக இந்த அணைகளை கட்டப்போவதாகவும், தமிழகம் இதனை தடுத்தாலும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இங்கிருந்து பாசன பரப்பை அதிகபடுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்துக்கு உபரி நீர் கூட வராமல் போய்விடும். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் அபாயம் உள்ளது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்தை உடனே அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை(22ம் தேதி) திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, ஜி.கே.வாசன் கட்சி, சமக, நாம் தமிழர் கட்சி, மமக, திராவிட விடுதலை கழகம் உள்பட 25 அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், வழக்கறிஞர்கள், லாரி, தனியார் பேருந்து, கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், மகளிர் குழுக்கள், அரசு பணியாளர்கள், ஆலை தொழிலாளர் சங்கங்கள் என பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், நாளை நடைபெறும் போராட்டத்தின்போது 3 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 லட்சம் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருக்கும். 500க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலும், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெறும்.தஞ்சையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மயிலாடுதுறையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் லாரிகளும் நாளை ஓடாது. அன்றைய தினம் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மன்னார்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல் தனியார் பஸ்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கொடைக்கானல் கீழ்மலையில் காய்த்து குலுங்குது ஆரஞ்சு: விலையில்லாததால் விவசாயிகள் கவலை



  • நாளை திருவண்ணாமலை மகா தீபம்: கோயம்பேட்டில் இருந்து 700 சிறப்பு பஸ்கள்



  • திமுக எம்எல்ஏ வெளியேற்றம் : ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்



  • கோவை அருகே கோழிகளை தொடர்ந்து ஆடுகளும் சாவதால் பீதி



  • சட்டசபையில் விவாதிக்க வேண்டிய மக்கள் பிரச்னைகள் ஏராளம் கருணாநிதி அறிக்கை



  • வீட்டுமனை கண்காட்சி டிச.6, 7 தேதிகளில் நடக்கிறது



  • பிரசவத்தில் இளம்பெண் சாவு: மறியல் ராயபுரத்தில் பரபரப்பு



  • காசிமேட்டில் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் மற்றொரு தரப்பு தொடர் போராட்டம்



  • ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால் போராட்டம் : சீமான் அறிவிப்பு



  • தமிழகத்தில் லோக் அயுக்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription