இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

9/3/2025 3:45:00 PM
3ம் கட்ட தேர்தல் தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் காஷ்மீரில் வாக்குகள் சரிவு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு சமஸ்கிருதம்- மத்திய அரசு திடீர் புது உத்தரவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30 ஆயிரத்து 701 பேரும், பட்டதாரி  ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை  முடித்தவர்கள். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுகிறது.  அவ்வாறு இருக்கும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய முறையை கடைபிடிப்பது சரியல்ல.

வேலைவாய்ப்பில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி  கைதாகி வருகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்த 4 பேர் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான  நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளனர். இதற்குப்பிறகும் அரசு மனமிறங்கி இவர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது ஜனநாயக செயல்பாடாக தோன்றவில்லை. ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க  நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை  நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



  • பொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்



  • 5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்



  • பிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்



Facebook

Twitter

Mani Ratnam film Nitya bland

மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription