திருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமம் மேட்டுக் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). விவசாயி. திருமணம் ஆகவில்லை. கடந்த 17ம் தேதி இரவு வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த சீனிவாசனை 12 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட் மட்டையால் அடித்தும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்தது.
புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மறுநாள் 18ம் தேதி திருத்தணி கோர்ட்டில் 7 பேர் சரண் சரண் அடைந்தனர். மேலும் 3 பேரை அன்று இரவு போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சத்தரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுபாஷ் (31) என்பவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று இரவு கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுபாஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் பற்றி அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM