புழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்
புழல்:சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் செல்போன், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கைதிகள், கஞ்சா, செல்போன் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உத்தரவின்படி, ஜெயிலர் இளவரசன் மற்றும் சிறை காவலர்கள் நேற்றிரவு விசாரணை கைதிகள் அறையில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கைதியிடம் இருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், லிட்டில்ஜான் (36). அம்பத்தூர் ஜிஎம்.நகர் 3வது மெயின் ரோடு வானவில் குடியிருப்பை சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவரின் மீது ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. இதுகுறித்து புகாரின்படிபுழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM