செங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி
புழல்:சென்னை அருகே உள்ள செங்குன்றம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பஸ் நிலையத்தில் 25 பஸ்கள் மட்டும் நிறுத்த முடியும். பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களின் பைக், கார்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் அங்குதான் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களை நிறுத்த, எடுக்க முடியாமல் டிவைர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் டிரைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான பஸ்களை ரோட்டிலேயே நிறுத்தி, பயணிகளை ஏற்றி சென்றுவிடுகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘‘ பஸ் நிலையத்துக்கு வர பஸ்கள் சிரமப்படுவதால் நாரவாரிகுப்பத்தில் இருந்து அம்பேத்கர் தெரு வழியாக சென்றுவிடுகின்றனர். பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதை போக்குவரத்து அதிகாரிகள் தடுக்க வேண்டும். ஜிஎன்டி சாலையையொட்டி உள்ள பஸ் நிலையத்தில் இருவழி பாதையை அமைக்க வேண்டும்‘ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM