சென்னை:நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி பணம், நகை, பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் வியாபாரிகள் அதற்குரிய ஆவணத்தை கொண்டு செல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் வியாபாரிகள் ரூ.10 லட்சம் வரை எடுத்துச் செல்ல விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படியே வியாபாரிகள் ரூ.10 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம். ஆனால் அவர் வியாபாரி என்பதற்கு அடையாள அட்டை, கடைசியாக பண பரிமாற்றம் செய்த ரசீது அல்லது பாங்கியில் பணம் எடுத்த ரசீது இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலி பறக்கும் படையினராக புது அவதாரம் எடுக்க தொடங்கியுள்ளனர். இதை தடுக்க போலீசார் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். பறக்கும் படை அதிகாரிகள் ஆங்கிலத்தில் ‘ஜி‘ அல்லது தமிழில் ‘அ‘ என்று எழுத்து பொறிக்கப்பட்ட வாகனங்களில் வருவார்கள். அவர்களுடன் போலீசார் வருவார்கள். தேர்தல் கமிஷன் வழங்கிய அடையாள அட்டையை அவர்கள் வைத்திருப்பார்கள்.வியாபாரிகளுக்கோ, பொது மக்களுக்கோ அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அடையாள அட்டையை வாங்கி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM