பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே இன்று 3 பஸ்கள் திடீரென மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். பூந்தமல்லியில் இருந்து அம்பத்தூருக்கு தடம் எண் 20பி மாநகர பஸ் இன்று சென்றது. அதுபோல பூந்தமல்லியில் இருந்து தி.நகருக்கு தடம் எண் ஜி54 மாநகர பஸ் சென்றது. பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடி பஸ் நிறுத்தம் அருகே பூந்தமல்லியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 25ஜி மாநகர பஸ் வேகமாக வந்து, ஜி54 பஸ் மீது மோதியது. அது முன்னால் சென்ற 20பி பஸ் மீது மோதியது.
இதில் 3 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன. 25ஜி பஸ் டிரைவர் லிங்கம் (46) பலத்த காயம் அடைந்தார். பயணிகள் ரேகா, ராஜன் உள்பட 7 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் 8 பேரும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து பற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM