திருச்சி:தஞ்சை மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தை துவக்குகிறார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 14ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் தொடங்கிய அவர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளார். இன்று காலை 6.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு ஸ்டாலின் வந்தார். விமான நிலையத்தில் அவரை தஞ்சை திமுக வேட்பாளர் டிஆர்.பாலு, திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வேட்பாளர் அன்பழகன், பெரம்பலூர் வேட்பாளர் சீமானூர் பிரபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தஞ்சை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து இன்று மாலை 3 மணிக்கு திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். தொடர்ந்து, உளூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, திருவையாறு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இரவு 9.10 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, வேட்பாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பழனிமாணிக்கம் மற்றும் திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
தஞ்சையில் இரவு தங்கும் ஸ்டாலின், நாளை பிற்பகல் 3 மணிக்கு மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில், டிஆர் பாலுவை ஆதரித்து பேசுகிறார். பின்னர், நாகை(தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை, கீழ்வேளுர், திருவாரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 8.45 மணிக்கு குடவாசலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.
நாளை மறுநாள்(22ம் தேதி) மாலை மயிலாடுதுறை தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இரவு 8.30 மணிக்கு சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM