உக்ரைனில் பதற்றம் நீடிப்பு கிரீமியா கடற்படை தளங்களை ரஷ்ய படை கைப்பற்றியது சமரசம் ஏற்படுத்த ஐ.நா. முயற்சி
செவஸ்டோபால்:உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியா இனிமேல் தனி நாடாக செயல்படும் என்று அறிவித்த ரஷ்யா, அங்குள்ள 2 கடற்படை தளங்களை நேற்று கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து உக்ரைன் விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சை எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்து விரட்டினர். தற்காலிக அதிபர், பிரதமரை நியமித்தனர். இந்நிலையில், உக்ரைனின் தென் மேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பகுதியான கிரீமியாவில் ஓட்டெடுப்பு நடத்தி, தனி நாடாக அறிவித்தது ரஷ்யா. அங்கு படைகளையும் குவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி8 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்பட சில நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்தன.
அங்கு போர் மூளும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், கிரீமியாவில் உள்ள 2 கடற்படை துறைமுகங்களை ரஷ்ய படைகள் நேற்று கைப்பற்றின. மேலும் உக்ரைன் கடற்படை கமாண்டர் செர்ஜி கேய்துக்கை ரஷ்ய படையினர் கைது செய்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் தென் பகுதியில் இருந்து கிரீமியா வரை சாலை மற்றும் ரயில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று மாஸ்கோவில் அறிவித்தார்.
உக்ரைன், கிரீமியா பகுதியில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் முயற்சி மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினை இன்று அவர் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை உக்ரைன் தலைநகர் கீவ் சென்று தற்காலிக அதிபர், பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM