அமெரிக்கா அதிரடி நடவடிக்கை சிரியா தூதரகங்கள் மூடல் அதிகாரிகள் வெளியேற உத்தரவு
வாஷிங்டன்:அமெரிக்காவில் உள்ள சிரிய நாட்டு தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் அமெரிக்கா அல்லாத வெளி நாட்டு அதிகாரிகள் உடனடியாக அவர்களது நாடுகளுக்கு திரும்பும்படி அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறுத்துவதற்கான அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனவே சிரியாவுடனான வெளியுறவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவின் சிறப்பு தூதர் டேனியல் ருபின்ஸ்டெய்ன் கூறுகையில், உள்நாட்டு போரில் சிரிய மக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்க சிரிய அதிபர் பஷால் அல் ஆசாத் மறுத்துவிட்டார்.
எனவே ஆசாத்தால் அமெரிக்காவில் பணியாற்ற தூதரகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதைத் தொடர்ந்து, வாஷிங்டன், டிராய், மிக்சிகன், ஹுஸ்டன் மற்றும் டெக்சாஸ் ஆகிய நகரங்களில் உள்ள துணை தூதரகங்களின் சேவைகளையும் நிறுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் டேனியல் ருபின்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள தனது தூதரகங்களை மூடப் போவதாக கடந்த 10-ம் தேதி சிரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM