உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல் மேலும் 3 ஆட்டங்கள் நடக்கிறது
5வது 20-20 உலககோப்பை வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் குரூப் 2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி சூப்பர் 10 சுற்றில் வருகிற 21-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக தாகாவில் இன்று நடக்கும் தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தாகாவில் நடக்கிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது. சரியான துவக்கம் கிடைக்காதது முக்கிய காரணமாக அமைந்தது.
இன்று ரோகித் அல்லது தவானுக்கு பதில் ரகானேவை ஓபனிங்கில் களமிறக்கலாம். ரெய்னா, யுவராஜ்சிங்கின் அதிரடி ஆட்டம் தொடர வேண்டும். 3வது வீரராக வருவதால் ரெய்னாவுக்கு பேட்டிங் செய்ய அதிக நேரம் கிடைக்கிறது. இதை இவர் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கோஹ்லியின் பொறுப்புடன் ஆட வேண்டும். இலங்கைக்கு எதிராக பேட்டிங் செய்யாத டோனி இன்று களமிறங்கலாம்.
அஸ்வின் சுழலில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கைகொடுப்பது அணிக்கு பலமாக உள்ளது. இவருக்கு ரவீந்திர ஜடேஜாவும் ஒத்துழைப்பு தர வேண்டும். அமீத் மிஸ்ராவின் சுழல் ஜாலம் தொடரலாம். வேகப்பந்து வீச்சில் முகமதுஷமி நம்பிக்கை அளிக்கிறார். புவனேஸ்வரைவிட வருண் ஆரோன் சிறப்பாக பந்துவீசுகிறார். மோகித் சர்மாவுக்கும் இப்போட்டியில் வாய்ப்பு தந்து பார்க்கலாம். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்டூவர்ட் பிராடு முழங்கால் காயத்தால் அவதிப்படுவது பின்னடைவுதான்.
அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இல்லாமல் இருப்பது அணிக்கு பலவீனம். லூக்ரைட், போபரா, மோர்க்கன் பேட்டிங்கில் ஜொலிப்பார்கள். 20-20 தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள அலெக்ஸ் ஹேல்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய ஜோர்டான் விக்கெட் வேட்டை நடத்தலாம். மற்ற பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து, இலங்கை -வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM