Tamil Month Rasi Palan Maasi 2013
2014
19
Mar
கூட்டணி கட்சிகளை மதிப்பவர் கருணாநிதி அன்பழகன் பேச்சு


தாம்பரம்:ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் குரோம்பேட்டையில் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தா. மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி வரவேற்றார்.திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியது:

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பல்வேறு  தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். அந்த சூழலை மாற்றுவதற்காக வந்ததுதான் இந்த நாடாளுமன்ற தேர்தல்.நாம் அதிக இடங்களில் வெற்றி பெறும்போது மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வழிவகை செய்யும்.
தமிழகத்தில் 5 முறை கருணாநிதி முதல்வராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.  தமிழகமும், தமிழனும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கருணாநிதிதான். ஆனால் ஜெயலலிதா, தமிழனை மதிக்காதவர்.

கூட்டணியை மதிக்காதவர்.

40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து கம்யூனிஸ்ட்டுகளை  கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார். ஆனால் கருணாநிதி அப்படி அல்ல. தனக்கு சமமாக கூட்டணி கட்சிகளை மதிப்பவர்.இவ்வாறு க.அன்பழகன் பேசினார்.ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற தொகுதி பொறுப் பாளர் மீ.அ.வைதியலிங்கம், தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, பம்மல் நகர செயலாளர் வே.கருணாநிதி, பேரூர் செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், பீர்க்கன்காரணை ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement