தாம்பரம்:பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் கர்ப்பிணி பெண் தீயில் கருகி இறந்தார். இவர் எரித்து கொல்லப்பட்டாரா என்று கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கரன் நகர் ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் முருகன் (30). கட்டிட வேலை செய்கிறார். அவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு 2008ல் திருமணம் நடந்தது. பிரேம்குமார் (3) என்ற மகன் உள்ளான். பவித்ரா, 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே சண்டை இருந்தது. இதில் பவித்ரா கோபித்து கொண்டு விழுப்புரம் அடுத்த திருக்கோவிலூர் பகுதியில் கடுகானூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை சமாதானம் செய்து பொழிச்சலூர் அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு முருகன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்து ஓடிவந்த முருகன், பவித்ரா தீக்குளித்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறினார். உடனே பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். தீயில் கருகிய பவித்ரா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் சங்கர்நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவித்ரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது பற்றி கணவர் முருகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:40:06 PM
-Updated 3/13/2014 2:39:58 PM
-Updated 3/13/2014 2:39:50 PM