Tamil Month Rasi Palan Maasi 2013
2014
13
Mar
அண்ணா சாலையில் நேற்றிரவு பரபரப்பு 15 லட்சத்துடன் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது


சென்னை:கள்ள நோட்டுகளை கொடுத்து நல்ல நோட்டுகளை பெறும் கும்பல் அண்ணா சாலையில் நேற்று இரவு சிக்கியது. அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக வைத்திருந்த ரூ.15 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 24ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற கட்சிகள் முயல்கிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் தனிப்படைகளை அமைத்துள்ளனர். அதன்படி, 1400 தனிப்படைகள் களத்தில் உள்ளன.

இந்த தனிப்படையினர் போலீசாரின் உதவியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்று இரவு நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவனிடம் பெரிய பை ஒன்று இருந்தது. இதுகுறித்து, சிபிசிஐடியின் கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சந்தேக நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்தனர்.

பின்னர், அவர்கள் கையில் வைத்திருந்த பேக்கை பறிமுதல் செய்து, சோதனை நடத்தியபோது, அதில் ரூ.1000, 500 டம்மி ரூபாய் நோட்டு கட்டுகள் 14 கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.15 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தது. இது தொடர்பாக அண்ணா நகரை சேர்ந்த கார்த்திக் (28), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரசுல்கான் (28), தண்டையார் பேட்டையை சேர்ந்த நாகூர்கான் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து போலீசார் கூறியதாவது;

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கொடுத்து ரூ.50 ஆயிரம் நல்ல ரூபாய் நோட்டுகளை பெறும் கும்பல் சென்னையில் சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று இரவு அண்ணா சாலையில் 3 வாலிபர்களை சுற்றி வளைத்தோம். அவர்களிடம் பணம் பெற திட்டமிட்டது யார் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூக்கடையில் ராஜஸ்தானை சேர்ந்த கள்ள நோட்டு கும்பல் தலைவன் சிக்கினான். இந்நிலையில், அண்ணா சாலையில் 3 வாலிபர்கள் சிக்கியுள்ளனர். சென்னையில் தற்போது கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement