சென்னை:பாரதிய ஜனதா அணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் நாளை அறிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜ அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என்று தேமுதிகவிடம் 4 கட்டங்களாக பா.ஜ. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 14 தொகுதிக்கான பட்டியலை பாஜவிடம் தேமுதிக நிர்வாகிகள் அளித்தனர். அதில் அரக்கோணம், வடசென்னை, தென்சென்னை, கிருஷ்ணகிரி, ஆரணி, கோவை, விழுப்புரம், கடலூர், திருப்பூர், திருச்சி, சேலம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தேமுதிக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் சில தொகுதிகளில் பாமக, பாஜ போட்டியிட விரும்புகின்றன. அதனால் பா.ஜ. கேட்டுக் கொண்டதன்படி, தேமுதிகவினர் புதிய பட்டியலை கொடுத்துள்ளனர். இன்றைக்குள் பாமக, தேமுதிகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட வேண்டும் என்பதில் பாஜவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர். குறிப்பிட்ட சில தொகுதிகளை விட்டு கொடுக்கும்படியும் பாஜவினர் 2 கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜவின் கோரிக்கையை தேமுதிக, பாமக ஏற்கும் பட்சத்தில் இன்று மாலைக்குள் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விடும். அதன் பின்னர், இன்று இரவு அல்லது நாளை காலை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியலை தமிழக பாஜ தலைவர்கள் டெல்லி சென்று அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கின்றனர். நாளை காலை 11 மணிக்குள் கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து வெளியிடுவார் என்று பாஜ பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. பாஜ கூட்டணியில் தேமுதிக 14, பாமக 8, பாஜ 8, மதிமுக 7, என்ஆர் காங்கிரஸ் 1, ஐஜேகே 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்பி நரசிம்மன் தலைமையில் காங்கிரசார் ஏராளமானோர் இன்று காலை கமலாலயத்தில் பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜவில் இணைந்தனர்.
சிக்கல் இல்லை
பா.ஜ. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜ கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும். அதன்பின் பாஜ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படுவார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:40:06 PM
-Updated 3/13/2014 2:39:58 PM
-Updated 3/13/2014 2:39:50 PM