புதுடெல்லி:அசாம் மாநிலத்தில் தேர்தல் தேதிகளை மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மக்களவைக்கு ஏப்ரல் 7 தொடங்கி மே 12 வரை 9 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், சில மாநிலங்களில் பல கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 7 மற்றும் 12ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இரண்டு தேதிகளிலும் உள்ளூர் பண்டிகை இருப்பதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அசாம் கன பரிஷத் உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், கோவா மாநிலத்தில் உள்ள இரண்டு மக்களவை தொகுதியிலும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதில் கோவா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டது. இதனால் அசாம் மாநிலத்திலும் தேர்தல் தேதி மாற்றப்படலாம் என அந்த மாநில அரசியல் கட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தன. இந்நிலையில் அசாம் தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கூறுகையில், அசாமில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ஒரு சில கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:40:06 PM
-Updated 3/13/2014 2:39:58 PM
-Updated 3/13/2014 2:39:50 PM