மயான கொள்ளையில் பரிதாபம் டிராக்டர் டயரில் சிக்கி 2 பேர் நசுங்கி சாவு
வேலூர்:வேலூரில் நேற்று நடந்த மயான கொள்ளை விழாவின்போது டிராக்டர் டயரில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவராத்திரி நாளுக்கு மறுநாள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மயான கொள்ளை விழா நடைபெறும். இதேபோல் நேற்று வேலூரில் மயான கொள்ளை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் விருதம்பட்டு அடுத்த வெண்மணி மோட்டூர் பகுதியில் இருந்து டிராக்டரில் அலங்கரித்து எடுத்து வரப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லக்கு பாலாற்றுக்கு வந்து, சூறையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் நேற்றிரவு பாலாற்று அண்ணா பாலம் வழியாக திரும்பி கொண்டிருந்தது.
அப்போது, திடீரென நின்றிருந்த டிராக்டர் பின்னோக்கி நகர்ந்தது. அப்போது அதன் பின்னால் நின்றிருந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ராமு (50), மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்த காமராஜ்(42) ஆகிய 2 பேர் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். படுகாயம் அடைந்த அவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமு (50) ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த காமராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நள்ளிரவு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/3/2025 3:06:04 PM
-Updated 3/3/2025 3:05:33 PM
-Updated 3/3/2025 3:05:17 PM
-Updated 3/3/2025 3:05:02 PM
-Updated 3/3/2025 3:04:54 PM
-Updated 3/3/2025 3:04:44 PM
-Updated 3/3/2025 1:55:36 PM
-Updated 3/1/2025 12:13:18 PM
-Updated 3/1/2025 12:12:58 PM
-Updated 3/1/2025 12:12:33 PM
-Updated 3/1/2025 12:12:08 PM
-Updated 3/1/2025 12:11:45 PM
-Updated 3/1/2025 12:11:36 PM
-Updated 3/1/2025 12:08:59 PM
-Updated 3/1/2025 12:08:51 PM