மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் திருவள்ளூர் நகர திமுக சார்பில் 620 பேருக்கு வேட்டி, சேலைகள்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகர திமுக சார்பில், பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திருச்சியில் நடைபெற்ற 10வது மாநில மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தை முன்னிட்டு 620 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கு நகர துணை செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் பரசுராமன்,பொன்பாண்டியன், கமலக்கண்ணன், நந்தகுமார், சங்கர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஸ்குமார் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில், கோவி.செழியன் எம்எல்ஏ, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் எம்பி ஆ. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி பேசினர்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.சண்முகம், ஆதிசேஷன், வி.கே.சந்திரசேகர், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் தி.ராசகுமார், சுந்தர்ராஜ், ஜெகதீசன், ரவிச்சந்திரன், வக்கீல் எஸ்.கே.ஆதாம், மூர்த்தி, மணிமேகலை, ஜெ.சேகர், டி.செல்வகுமார், சிவகுமார், வேலாயுதம், குப்பன், ஆசிஸ்குமார், கோபால், விஜயகுமார், இளங்கோவன், சீனிவாசன், துரை பன்னீர், கலைவாணன், ராஜி, கைலாசம், மகாலிங்கம், அருண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அய்யூப் அலி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.
-Updated 3/5/2025 2:54:15 PM
-Updated 3/5/2025 2:54:07 PM
-Updated 3/5/2025 2:54:00 PM
-Updated 3/5/2025 2:53:51 PM
-Updated 3/5/2025 2:53:29 PM
-Updated 3/5/2025 2:53:20 PM
-Updated 3/5/2025 2:53:08 PM
-Updated 3/5/2025 2:52:50 PM
-Updated 3/5/2025 2:52:33 PM
-Updated 3/5/2025 2:51:33 PM
-Updated 3/5/2025 2:51:20 PM
-Updated 3/5/2025 2:51:09 PM
-Updated 3/5/2025 2:51:00 PM
-Updated 3/5/2025 2:50:47 PM
-Updated 3/5/2025 2:16:03 PM