பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி டிரைவர் பரிதாப சாவு
ஆவடி:பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் இறந்தார்.சென்னை மதுரவாயல்& தாம்பரம் பைபாஸ் சாலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை தொலைபேசி நிலையம் அருகே நேற்றிரவு கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றிருந்தது. அந்த வழியாக தாம்பரத்தில் இருந்து மாதவரம் நோக்கி சென்ற மினி வேன், எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியதில் வேன் டிரைவர் ராஜேஷ் (26) உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்தார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
மற்றொரு விபத்து:
ஆவடி அருகே கீழ்கொண்டையார் பெருமாள் கோயில் தெருவில் வசித்தவர் பாலு (42). இவர் போர்வெல் ஊழியர். நேற்று வேலையை முடித்துவிட்டு திருநின்றவூர்& பெரியபாளையம் சாலையில் கீழ்கொண்டையார் பகுதி சந்திப்பில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலு இறந்தார்.இந்த விபத்துகள் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM