திருந்திய நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
பள்ளிப்பட்டு:ஆர்கே.பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் முகமது ரபீக் அறிக்கை:ஆர்கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 18 ஆயிரம் விவசாயிகள், நெல், வேர்க்கடலை, கரும்பு பயிரிட்டுள்ளனர். திருந்திய நெல்சாகுபடி முறையில் பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண்மை துறை அறிவித்துள்ளது. நவரை பருவத்தில் 150 ஹெக்டேருக்கு திருந்திய நெல்சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 1500 ரூபாய்க்கு இடுபொருட்கள் மற்றும் 1500 செக் வழங்கப்படும்.
திருந்திய நெல்சாகுபடி செய்வதால் பயிர் செலவு குறைவது மட்டுமல்லாமல் மகசூலும் அதிகரிக்கிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை போக்குவதற்கு நெல் பயிர் நடுதல், களை எடுத்தல் வேலையை இயந்திரம் மூலம் செய்துகொள்ளலாம். சம்பா அறுவடை முடிந்து உள்ள வயல்களில் அதிக மகசூல் தரக்கூடிய மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் பயன் அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM