ஆலந்தூர்:அப்பலோ மருத்துவமனை சார்பில் சர்வதேச 3 நாள் புற்றுநோய் கருத்தரங்கம் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப்.சி ரெட்டி தலைமை வகித்தார். ஜிம்பாப்வே நாட்டின் சுகாதார அமைச்சர் டேவிட் பக்வாசிசி, தான்சானிய நாட்டு சுகாதார அமைச்சர் ரஷிசெய்ப் பெலிமல், அப்பலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரீத்தா ரெட்டி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, ‘Ôபுற்றுநோயை புதிய மருத்துவ முறை ஆகியவற்றால் கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக கதிரியக்க சிகிச்சை பிரிவுகள், குருதியியல் துறை மற்றும் ரோபாடிக்ஸ் போன்ற முறைகளில் ஏற்பட்டுள்ள விரிவான முன்னேற்றங்கள் குறித்தும், இந்த கருத்தரங்கு மூலம் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் விவாதிக்க உள்ளனர். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இதை தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த 6 பேருக்கு நினைவு பரிசுகளை அப்துல்கலாம் வழங்கினார். இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 500க்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM