காஞ்சி. மாவட்ட எஸ்.சி.அணி சார்பில் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
கூடுவாஞ்சேரி:சென்னை வண்டலூரில் இன்று மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சிறப்புரையாற்றுகின்றார். அவருக்கு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது.நரேந்திர மோடியை வரவேற்று கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை கட்சி கொடி, டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்சி அணி தலைவர் இன்பராஜ் தலைமையில் சென்னையில் இருந்து வண்டலூர் வரை சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். 120 வாகனங்களில் 3000 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.மாவட்ட தலைவர் பலராமன், கோட்ட அமைப்பு செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் முருகன், கனேசன், ராஜேந்திரன், கிருஷ்ண ராஜசேகர், பாபு, மணவாளன், சுந்தரி, அரிகிருஷ்ணன், ஸ்ரீதர், நாகராஜ், ஆதிகேசவன், ஆனந்தகுமார், கோபிநாத், இளங்கோவன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM