‘‘கிராமத்தில் குட்டையை காணோம்’’ ஊராட்சி தலைவரின் மனுவால் பரபரப்பு
திருத்தணி:கிராமத்தில் உள்ள குட்டையை காணோம் என்று ஊராட்சி தலைவர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் கிராமத்தில் வருவாய் திட்டம் முகாம் நேற்று நடந்தது.இந்த முகாமுக்கு தாசில்தார் செல்வகுமாரி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் செல்வகுமார் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் செல்வம், ஊராட்சிமன்ற தலைவர் செஞ்சம்மா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவர் குணாளன் கலந்துகொண்டார். முகாமில் 56 மனுக்கள் வந்தன. 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 24 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. விஏஓ சரவணன் நன்றி கூறினார்.
இதுபோல் மாமண்டூர் கிராமத்தில் நடந்த வருவாய் திட்ட முகாமுக்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமணன் தலைமை தாங்கினார். முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர்.இதில் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் கொடுத்த மனுவில், ‘‘ மாமண்டூர் கிராமத்தில் குட்டை உள்ளதாக அரசு ஆவணத்தில் உள்ளது. ஆனால் அந்த குட்டையை காணவில்லை. எனவே, அதை கண்டுபிடிக்க வேண்டும்‘ என்று கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இந்த மனு மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM