சென்னையில் 17ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் பட்டினி போராட்டம்
ஆத்தூர்:சென்னையில் வரும் 17ம் தேதி அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தங்கள் குடும்பத்துடன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, மாநில தலைவர் பாலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசால் நடத்தப்படும் மதுபானக் கடைகளில் 30 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 10 ஆண்டு களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பணி விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இதனால், உயரதிகாரிகளின் கெடுபிடியால் கடும் அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர்.
மேலும், அனுமதியின்றி செயல்படும் பார்களை நடத்துபவர்களால் ஊழியர்கள் தாக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் அன்றாட நிகழ்வாக உள்ள நிலையில் இவர்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை. அரசு கடந்த 2012&13ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மதுவின் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரத்திற்காக ரூ.5 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், மதுபான கடை ஊழியர்களிடம் அதிகளவில் மதுபானத்தை விற்க கட்டாயப்படுத்துகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 17ம் தேதி டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினி பேராட்டம் நடத்த உள்ளனர். இவ்வாறு பாலுசாமி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/15/2014 12:35:00 PM
-Updated 2/15/2014 12:34:50 PM
-Updated 2/15/2014 12:13:11 PM
-Updated 2/13/2014 2:28:04 PM
-Updated 2/13/2014 2:27:01 PM
-Updated 2/13/2014 2:26:38 PM
-Updated 2/12/2025 2:59:40 PM
-Updated 2/12/2025 2:59:27 PM
-Updated 2/12/2025 2:57:23 PM
-Updated 2/12/2025 2:23:58 PM
-Updated 2/12/2025 2:13:36 PM
-Updated 2/11/2025 2:19:21 PM
-Updated 2/11/2025 2:15:54 PM
-Updated 2/11/2025 2:14:52 PM
-Updated 2/10/2025 4:56:16 PM