Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Feb
காஞ்சிபுரம் நகராட்சி கூட்டத்தில் பஸ் நிறுத்தத்தை அகற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு


காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் மைதிலி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் விமலா முன்னிலை வகித்தார். இதில், 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் பயன்பாட்டில் இல்லை. சமூக விரோத செயல் நடக்கிறது. வியாபாரிகள் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பஸ் நிறுத்தம் அப்புறப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கவுன்சிலர்கள் சீனிவாசன், சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்து பேசும்போது, ‘‘ காந்தி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம் முன்னாள்   முதல்வர் பக்தவச்சலம் பெயரில் உள்ளது. ஆகவே, பஸ் ஸ்டாப்பை அகற்றக்கூடாது. சமூக விரோத செயல் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர். இதை ஆதரித்து அனைத்து கவுன்சிலர்களும் பேசினர்.ஜெகநாதன் (திமுக): என் வார்டில் சாலை பணிகள் சரிவர நடக்கவில்லை.திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மைதிலி கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran