வண்டலூரில் பாஜ பொதுக்கூட்டம் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் தலைமையில் 5 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு
சென்னை:பாஜ வர்த்தகர் பிரிவு மாநில துணை தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் கூறியவதாவது:சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் பாஜ பொதுக்கூட்டம் தமிழகத்தில் திருப்புமுனை கூட்டமாக அமையும். இக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் களை வரவேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட பந்தல் வரை வரவேற்பு கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வர்த்தக பிரிவினர் திரண்டு வருகிறார்கள். மேலும், வடசென்னையில் இருந்து மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை 500 வேன்களில் அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து பாஜ தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக மாநில வர்த்தக பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/8/2025 12:39:55 PM
-Updated 2/8/2025 12:39:46 PM
-Updated 2/8/2025 12:39:34 PM
-Updated 2/8/2025 12:39:26 PM
-Updated 2/8/2025 12:39:17 PM
-Updated 2/8/2025 12:39:09 PM
-Updated 2/8/2025 12:38:59 PM
-Updated 2/8/2025 12:17:30 PM
-Updated 2/7/2025 2:05:44 PM
-Updated 2/7/2025 2:05:35 PM
-Updated 2/7/2025 2:05:26 PM
-Updated 2/7/2025 2:04:52 PM
-Updated 2/7/2025 2:04:15 PM
-Updated 2/7/2025 1:54:41 PM
-Updated 2/7/2025 1:52:07 PM