2 ஊராட்சியில் 1684 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர்
ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு தாசில்தார் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றியக்குழு தலைவர் அம்மினி மகேந்திரன், துணைத் தலைவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் குமுதவல்லி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் வரவேற்றனர். இதில் அமைச்சர் ரமணா, எம்எல்ஏக்கள் மணிமாறன், பொன்ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 792 பயனாளிக்கு இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கி பேசினர். மெய்யூர் ஊராட்சியில் நடந்த விழாவில் 892 பயனாளிக்கு இலவச பொருட்களை அமைச்சர் ரமணா வழங்கினார். தாசில்தார் கிறிஸ்துதாஸ், துணை தாசில்தார் லதா, பூண்டி ஒன்றியக்குழு தலைவர் அம்மு மாதவன், துணைத் தலைவர் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் அமுதா சக்கரவர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் ராணி பூங்காவனம், துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM