அரூர்:தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளி சரவணன் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். கூலி தொழிலாளியான இவர், சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவரது மகள் இந்துமதி (15). இவர் நரிப்பள்ளியில் பாட்டி குப்பு (65) வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வந்தார். குப்புவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (30).
விடுமுறை நாளான நேற்று இந்துமதி உள்பட அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் சண்டை பெரியவர்கள் வரை சென்று மோதல் ஏற்பட்டது. இதில், குப்புவிற்கும், கோவிந்தமாளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதை பார்த்த இந்துமதி, பாட்டி குப்புவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது கோவிந்தம்மாள், ஆவேசத்துடன் இந்துமதியின் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளினார். இதில் சிமெண்ட் தரையில் தலை மோதி இந்துமதி மயங்கினார். இதையடுத்து கோவிந்தம்மாள் அங்கிருந்து ஓடி விட்டார்.
அப்பகுதி மக்கள் மாணவி இந்துமதியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. இதுபற்றி இந்துமதியின் பாட்டி குப்பு, கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான கோவிந்தம்மாளை வலை வீசி தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM