டெல்லியில் பிப்.27, 28 ல்வணிகர் சங்க மாநாடு விக்கிரமராஜா பேட்டி
லாலாப்பேட்டை:கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை புணவாசிப்பட்டியில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:டெல்லியில் நேற்று முன்தினம் பேரமைப்பு நிர்வாகிகள் மத்திய உணவுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை நேரில் சந்தித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை நீக்க வலியுறுத்தினோம். மத்திய அமைச்சரும் இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய தடைச் சட்டத்தை அமல்படுத்த 540 சுகாதாரத்துறை அதிகாரிகளை நியமித்து அரசு கெடுபிடி செய்து வருகிறது. தமிழக முதல்வரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லியில் வரும் பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் தேசிய வணிகர் சங்க மாநாடு நடக்கிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசுகிறார். 28ம் தேதி மாநாட்டில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM