சுகாதார நிலையங்களில் நர்சுகள் இல்லாமல் கர்ப்பிணிகள் அவதி
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் நர்சுகள் தங்காததால் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு கிராம நர்சு பணியிடம் உள்ளது. இவர்களுக்கு அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் 303 துணை சுகாதார நிலையம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கு நர்சுகள் தங்கி, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது, பிரசவம் பார்ப்பது, பிரசவத்துக்கு பின்னர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது போன்ற பணிகளை செய்கின்றனர். நர்சுகளுக்கு இலவச செல்போன், சிம் கார்டு வழங்கி உள்ளனர்.
ஆனால் பல கிராமங்களில் துணை சுகாதார நிலையத்தில் நர்சுகள் தங்குவதில்லை. இதனால் கர்ப்பிணிகள் அவசர சிகிச்சை பெற முடிவதில்லை. கிராமப் புறங்களில் பஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் மாட்டு வண்டியில் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.
மேலும் துணை சுகாதார நிலைய கட்டிடங்களின் மேற்கூரை, ஜன்னல், கதவு போன்றவற்றை சமூக விரோதிகள் திருடி சென்று விடுகின்றனர். எனவே துணை சுகாதார நிலையங்களை சீரமைத்து, அங்கு நர்சுகள் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:02:14 PM
-Updated 1/17/2014 4:01:55 PM
-Updated 1/17/2014 4:01:38 PM
-Updated 1/17/2014 4:01:20 PM