Tamil Month Rasi Palan Maasi 2013
2014
18
Jan
நாளை மாலை நடைபெறுகிறது ஆவடி நகரமன்ற தலைவர் சா.மு.நாசர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி


ஆவடி:ஆவடி நகரமன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான சா.மு.நாசர் மகன் எஸ்.என்.ஆசிம்ராஜா&ஆயிஷா ஹாஜரா ருஷந்தா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆவடி-பருத்திப்பட்டில் உள்ள கலைஞர் திடலில் நாளை (19ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மு.க.தமிழரசு ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொள்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் வரவேற்று பேசுகிறார். துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், ஆர்.டி.சேகர், முன்னாள் அமைச்சர்கள் எம்.உபயதுல்லா, க.சுந்தரம், முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கின்றனர்.

துணை பொதுச் செயலாளர்கள் எஸ்.பி.சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆர்.காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.ஆர்.பெரியகருப்பன், எல்.மூக்கையா, சு.ப.தங்கவேலன், என்.சுரேஷ்ராஜன், நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் அ.ரகுமான்கான், கே.பி.பி.சாமி, எம்.பி.க்கள் ஜி.சுகவனம், ஜே.எம்.ஆருண் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி, நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகின்றனர். சா.மு.நாசர் நன்றி கூறுகிறார்.

திருமண நிகழ்ச்சிக்கு வருகைதரும் மு.க.ஸ்டாலினை வரவேற்று அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, செக்போஸ்ட், காமராஜர் நகர், ஆவடி மார்க்கெட், கன்னிகாபுரம், ஜெபி. எஸ்டேட், கோவர்த்தனகிரி, மூர்த்தி நகர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் கட்அவுட், டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. தாரை, தப்பட்டை முழங்க கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran