சென்னை:தென்னிந்திய அளவிலான 27வது அறிவியல் பெருவிழா சென்னையில் 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 3 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தென்னிந்திய அளவில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பங்கேற்கும் வகையில், 27வது அறிவியல் பெருவிழா சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. ‘அறிவியல் மற்றும் கணித புதுமைகள்’ என்ற மையக்கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அறிவியல் பெருவிழா நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் முதலிடம் பிடித்த பள்ளிகளே இந்த தென்னிந்திய அறிவியல் பெருவிழாவில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 50 மாணவர்களும், 50 ஆசிரியர்களும் என மொத்தம் 250 படைப்புகள் இந்த பெருவிழாவில் இடம் பெறுகின்றன. பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இந்த பெருவிழாவில் பங்கேற்க உள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:53 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:02:14 PM
-Updated 1/17/2014 4:01:38 PM
-Updated 1/17/2014 4:01:20 PM