பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒரு லட்சம் பேர் கண்டுகளித்தனர்
கூடுவாஞ்சேரி:தாம்பரம் அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இந்த 3 நாட்களில் மொத்தம் ரூ.30 லட்சம் வசூலானதாக பூங்கா இயக்குநர் ரெட்டி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வண்டலூர் பூங்காவுக்கு வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 3 நாட்களிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர். இதில் காணும் பொங்கலன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். இதனால் சென்னை&திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெருங்களத்தூர், வண்டலூர், ஓட்டேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர்&கேளம்பாக்கம் சாலைகளின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக பூங்காவுக்கு செவ்வாய்கிழமை வார விடுமுறை. ஆனால் இந்த முறை பொங்கல் பண்டிகை செவ்வாய்கிழமை வந்ததால் அன்று பார்வையாளர்கள் வசதிக்காக பூங்கா திறக்கப்பட்டது.
கூட்ட நெரிசலை தவிர்க்க 14, 15, 16 ஆகிய 3 நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுச்சீட்டு வழங்க 20 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு வரும் உணவுகளை சாப்பிடுவதற்கு நாற்காலி, மேசை வசதியுடன் உணவு அருந்தும் இடம் நுழைவாயில் அருகில் அமைக்கப்பட்டது. மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலிதீன் பைகளை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாக்க தனி அறை அமைக்கப்பட்டது. இதற்கு கட்டணம் வசூலிக்கவில்லை. வாகனங்களை நிறுத்த போதிய வசதி செய்யப்பட்டிருந்தது. தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 வனத்துறை பணியாளர்கள் சிறப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடும் செய்யப்பட்டது. தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த 3 நாட்களிலும் மொத்தம் ரூ.30 லட்சம் வசூலானது. காணும் பொங்கல் அன்று மட்டும் ரூ.15 லட்சம் வசூலானது.இவ்வாறு ரெட்டி தெரிவித்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:53 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:02:14 PM
-Updated 1/17/2014 4:01:55 PM
-Updated 1/17/2014 4:01:20 PM