தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலேசியாவுக்கு திடீர் பயணம்
சென்னை:நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
தேமுதிகவுடன் பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தின. அதேநேரத்தில் திமுக கூட்டணியில் சேர வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இதற்கு பதில் சொல்லாமல், மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று விஜயகாந்த் கூறினார். மேலும் அடுத்த மாதம் ஊழல் எதிர்ப்பு மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்றும், இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காமல் விஜயகாந்த் இருந்து வந்தார்.
இந்நிலையில், ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இதனால், விரைவில் கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலை இடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றார். அவர் தனியாக சென்றுள்ளார். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களுடன் கலந்து பேசி அவர் கூட்டணி பற்றி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:53 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:02:14 PM
-Updated 1/17/2014 4:01:55 PM
-Updated 1/17/2014 4:01:38 PM