தைப்பூச திருவிழாமுருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்:தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்தனர். கடலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 4 மணிக்கு அபிஷேகமும், 5.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
காலை 8 மணிக்கு அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரத வீதியிலுள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்தடைந்தார்.
மாலையில் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி எழுந்தருளி உள்மாடவீதிகள், ரதவீதிகள், சன்னதிதெரு வழியாக இரவில் கோயிலைச் சேர்கிறார்.தைப்பூசத்தை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்தும், ஏராளமான வாகனங்களில் முருகன் திருவுருவப்படத்தை மின்னொளியில் அலங்கரித்து பக்தி பாடல்களை இசைத்தபடியும் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்திருந்ததால் கோயில் வளாகம் மற்றும் நாழிகிணறு பஸ் நிலையங்களிலும், அனைத்து தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் பக்தர்கள் திண்டாடினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி கோயிலில் தைப்பூசம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடக்கும் தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில் தைப்பூச விழா இன்று விமரிசையாக நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர். மாலையில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று மாலை உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். பின் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்துகின்றனர். இதையடுத்து, குதிரை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் வீதியுலா வருகிறார். இதை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருத்தணி கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/21/2014 3:00:34 PM
-Updated 1/21/2014 3:00:26 PM
-Updated 1/21/2014 3:00:17 PM
-Updated 1/21/2014 3:00:03 PM
-Updated 1/21/2014 2:59:53 PM
-Updated 1/21/2014 2:59:41 PM
-Updated 1/21/2014 2:36:42 PM
-Updated 1/21/2014 2:28:35 PM
-Updated 1/21/2014 2:19:49 PM
-Updated 1/21/2014 2:19:41 PM
-Updated 1/18/2014 12:28:53 PM
-Updated 1/18/2014 12:28:45 PM
-Updated 1/17/2014 4:02:14 PM
-Updated 1/17/2014 4:01:55 PM
-Updated 1/17/2014 4:01:38 PM