இந்து காலனி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆலந்தூர்:நங்கநல்லூர் இந்து காலனி பகுதியில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இங்கு அடிப்படை வசதி செய்யப்படவில்லை. பஸ் நிலையத்தில் கதவுகள் பழுதடைந்து காணப்படுவதால் கால்நடைகள் பஸ் நிலையம் உள்ளே சென்று பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. பஸ் நிலையத்தில் வயதானவர்கள் சென்றால் அவர்கள் அமர இருக்கைகள் இல்லை. இதனால் பழுதாகி உள்ள சிமென்ட் திட்டில் உட்காரும் நிலை உள்ளது. மேலும், அங்கு சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பஸ் நிலையத்தினுள் வந்து ஓய்வெடுக்கின்
றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக பஸ் நிலையம் உள்ளது. இதனாலும் இரவில் பயணிகள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். பஸ் நிலையத்துக்கு என ஒரு காவலாளியை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM