திருப்போரூர் அருகே பாமக கொடி கிழிப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
திருப்போரூர்:திருப்போரூர் அருகே பாமக கொடி கிழிக்கப்பட்டு கயிறு அறுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம், அச்சரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட செயலாளர் வாசு, தலைவர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று காலை செம்பாக்கம், அச்சரவாக்கம் பஜார் வீதியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த பாமக கொடி மற்றும் கயிறு அறுக்கப்பட்டிருந்தது. இதை அறிந்ததும் பாமகவினர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பூபாலன், பாமக நகர செயலாளர் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் வன்னியகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது புகார் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM